மொச்சை கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

சிறிய வெங்கயாம் - 10

மொச்சை - 1 கப்

சிகப்பு மிளகாய் - 6

கொத்தமல்லி விதை - 3/4 தேக்கரண்டி

சீரகம் - 3/4 தேக்கரண்டி

மிளகு - 8

துருவிய தேங்காய் - 1/2 கப்

கசகசா - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இணுக்கு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் இல்லாமல் சிகப்பு மிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகு, தேங்காய் (1/4 கப்), கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்தெடுக்க வேண்டும்.

வெங்காயத்தை நேரிடையாக தணலில் சுட்டு தோலுரித்து வறுத்து வைத்திருக்கும் மற்றவையோடு சேர்த்து அரைக்க வேண்டும்.

மொச்சையை வேக வைத்து தோலுரித்து வைக்க வேண்டும். கசகசாவை சுடு தண்ணீரில் ஊறவைத்து மீதமுள்ள தேங்காயுடன் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மொச்சையை சேர்க்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து புளி தண்ணீர் சேர்த்து (தேவையானால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

புளியின் பச்சை வாசனை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள கசகசா மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: