மொச்சைப்பயறு குழம்பு (காய்ந்த பயறு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மொச்சைப்பயறு - 100 கிராம்

வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 3

மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள், சோம்பு, சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சையளவு

தேங்காய் - 2 சில்

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெந்தயத்தையும் போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதங்கியவுடன் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், உப்பு போட்டு சிறு தீயில் கிளறி புளித்தண்ணீரை ஊற்றி மொச்சையை போடவும்.

நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றவும்.

தேங்காயும் கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: