மொச்சைக் குழம்பு செய்முறை
தேவையான பொருட்கள்:
மொச்சை - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 1/2 கப்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியாதூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்
அரைக்க:
மல்லித்தழை, கருவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 4
செய்முறை:
மொச்சை 6 முதல் 8 மணிநேரம் ஊறவிடுங்கள்.
பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வையுங்கள்.
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
தக்காளி,மல்லித்தழை, கருவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மொச்சையை உப்பு சேர்த்து நன்கு வேகவையுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேருங்கள்.
இது நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி
புளி, உப்பு, மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.