மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த மொச்சை - 1 கப்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

துவரம் பருப்பு - 1 கப்

சாம்பார் பொடி - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு

கத்தரி, முருங்கை, வெண்டை, வாழை- 200 கிராம்

வெங்காயம் - பாதி

பூண்டு - 4

தக்காளி - பாதி

அரைக்க:

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 2 அல்லது 3

தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

தாளிக்க:

கடுகு - தாளிக்க

வெந்தயம் - தாளிக்க

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - சிறிது

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பு மற்றும் மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதனுடன் சாம்பார் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, காய்கள் எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். கலவை கொதித்ததும், வெந்த மொச்சை மற்றும் துவரம் பருப்பை போட்டு ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதை போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து குழம்புடன் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: