மொச்சைகொட்டை காரக்குழம்பு
தேவையான பொருட்கள்:
வேக வைத்த மொச்சை - 1 கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1 கப்
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிட்டிகை அளவு
அரைப்பதற்கு:
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தாளிக்க:
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவிடவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
புளி நன்கு கொதித்தவுடன், வெந்த மொச்சை மற்றும் வெந்த துவரம் பருப்பை போட்டு, ஒரு கொதி வந்ததும், அரைத்த விழுதை போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
இறுதியில், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி பரிமாறவும்.