மொச்சக்கொட்டை குழம்பு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை - 2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

புளி - எலுமிச்சை அளவு

தேங்காய் - 1 கப்

பூண்டு - 3 பல்

மிளகு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு, கருவேப்பிலை, வெந்தயம், நல்லெண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் பூண்டு மற்றும் மிளகாய் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் மொச்சையை சேர்க்கவும்.

மொச்சை முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய் அரவையை சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் மேல வர ஆரம்பித்ததும் இறக்கி சூடு சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்புகள்: