மைசூர் தால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறிது

பூண்டு - 5 பல்

மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எழுமிச்சம் பழம் - 1

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைசூர் பருப்பை தண்ணீர், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசிக்கவும் (குக்கரில் வேண்டாம்).

வெங்காயம், பூண்டு, தக்காளி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி கரைந்ததும் மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கவும்.

எழுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: