மைசூர்பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1 கோப்பை

தக்காளி - 2

பூண்டு - 2 பற்கள்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - ஒரு பிடி

எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி

நெய் (அல்லது) எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைசூர் பருப்பை கழுவி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஊறிய நீரோடு ஒரு பாத்திரத்தில் போட்டு மேலும் ஒரு கோப்பை நீரைச்சேர்த்து வேகவைக்கவும்.

பருப்பு முக்கால் பங்கு வெந்தவுடன் வெங்காயம் தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கி விட்டு மூடியைப் போட்டு வேகவிடவும்.

பருப்பு நன்கு வெந்தவுடன் உப்பையும், எலுமிச்சைரசத்தையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு இறக்கி விடவும்.

ஒரு சிறிய சட்டியில் நெய்யைக் சூடுபடுத்தி கடுகைப் போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் நசுக்கிய பூண்டைப் போட்டு நன்கு வறுத்து குழம்பின் மீது கொட்டவும்.

பின்பு பரிமாறும் கோப்பையில் குழம்பை ஊற்றி நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி விட்டு சீரக சோற்றிற்கு பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: