மேத்தி டால்





தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வெந்தயக்கீரை - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/4 கப்
எலுமிச்சைசாறு - 2 மேசைக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
வெந்தயக்கீரையை சுத்தமாக கழுவி கைகளால் லேசாக ஆய்ந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு வதக்கவும். கீரை நன்றாக வதங்கிய பின் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின் வேகவைத்த பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள், உப்பு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதிக்கும் போது பெருங்காயத்தூள், நெய் விட்டு கலந்து இறக்கவும்.
பின் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு கலந்து சூடான சாதத்தோடு பரிமாறவும்.