மூலிகை குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
துளசி இலை - 5
வேப்பிலை - 1
ஓம வள்ளி இலை - 5
கறிவேப்பிலை - 10
வெற்றிலை - 1
புதினா இலை - 3
மிளகு - 10
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் - 2
தேங்காய் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் எல்லா இலைகளையும் நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் போட்டு அத்துடன் புளி, தேங்காய், உப்பு, ஆகியவைகளை சேர்க்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், ஆகியவற்றை வாசனை வரும் வரை (சிவப்பாக) வறுத்து தழைகள் அடங்கிய கலவையுடன் போட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தண்ணீரில் சேர்த்து குழம்பாக ஆக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலிய வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அத்துடன் இந்த குழம்பை கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு பொங்கி கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.
குறிப்புகள்:
இந்த குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது.