முள்ளங்கி தேங்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 1 கோப்பை (1/4 வட்டமாக மெலிதாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (சிறியது)

தக்காளி - 1

புளி - ஒரு கோலிகுண்டு அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 3/4 கப்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 3/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

நல்லமிளகு - 3 எண்ணம்

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கீற்று

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முள்ளங்கியை 1/4 வட்டமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

புளியை ஒரு கப் சுடுநீரில் ஊறவைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பின்னர் வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கி விட்டு பிறகு முள்ளங்கியை வதக்கவும்.

3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்த உடன் புளியை கரைத்து அந்த தண்ணீரை சேர்த்து கிண்டி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் முள்ளங்கி வெந்து விட்டது என்றால் அரைத்த தேங்காய்த்துருவல் கலவையை சேர்த்து கிண்டி தேவையான அளவு உப்பு போட்டு எல்லாமும் சேர்ந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

குறிப்புகள்: