முளைகட்டிய வெந்தய குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

புளி - ஒரு லெமன் சைஸ்

பூண்டு - 10 பல்

வெங்காயம் - 1

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெந்தயத்தை கழுவி வடிகட்டி முளைக்கட்டவும்.

பூண்டு, வெங்காயம் பொடியாக அரிந்துக் கொள்ளவும்.

ஒரு பானில் ஆயில் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து முளைக்கட்டிய வெந்தயத்தை (தண்ணியில்லாமல்) போட்டு நன்றாக வறுக்கவும்.

வெந்தயம் வதங்கி சுருங்கியதும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு தனியா, மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை சேர்க்கவும்.

இப்பொழுது புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து திக்கானதும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: