முருங்கை வெண்டை குழம்பு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 2

வெண்டைக்காய் – 8

புளி - சிறு உருண்டை

தக்காளி – 1

வெங்காயம் - 1

பூண்டு – 5 பல்

கறிவேப்பிலை – ஒரு கீற்று

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி

மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி

தனியாத் தூள் – 3 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை, கறிவடகம் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காய் மற்றும் முருங்கைக்காயை ஒரே நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

தேங்காய் மற்றும் வேர்க்கடலையை விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

பின்னர் தக்காளி மற்றும் தூள் வகைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் கறிவடகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி காய்களை சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்

குழம்பு கொதித்ததும் தேங்காய் விழுதை போட்டு 5 நிமிடம் (எண்ணெய் மேலே மிதக்கும் வரை) கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்:

இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்