முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு சிறு கட்டு
மஞ்சள் தூள் - சிறிது
சிறு பருப்பு - 1/2 கப்
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.
சிறு பருப்பில் நீர் விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து அரை கப் நீர் விட்டு மூடி வேகவிடவும்.
முருங்கைக்கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பு மற்றும் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
பிறகு தேவையான நீர் விட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி துருவிய வெல்லம் சேர்க்கலாம்.