முருங்கைக்கீரை குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

மல்லித்தூள் - 1 1/2 கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/4 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை அலசி விட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.

தேங்காயுடன் சோம்பு சேர்த்து அரைக்கவும்.

வெந்த பருப்பில் மிளகாய்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், கீரை மற்றும் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

கீரை வெந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுதையும், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: