முருங்கைக்காய் மிளகூட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 6

துருவிய தேங்காய் - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

மிளகு - 1/2 ஸ்பூன்

ஜீரகம் - 1/2 ஸ்பூன்

மிளகா வத்தல் - 5

கடுகு - 1/2 டீஸ்பூன்

எண்ணை - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக்காயை பெரியதுண்டுகளாக நறுக்கி சிறிது உப்ப சேர்த்து வேகவைத்து, சதைப்பகுதியைமட்டும் ஒரு ஸ்பூனால் வழித்து தனியாக எடுத்து வைக்கவும்.

பருப்பை நன்கு குழைய வேகவிட்டுஅதில் முருங்கை விழுதைச்சேர்க்கவும்.

தேங்காய், மிளகாய்வத்தல் மிளகு, ஜீரகம், சிறிது தண்ணீர் ஊற்றி, நைசாக அரைத்து கொதிக்கும் பருப்புக்கலவையில் ஊற்றவும்.

ஒரு கொதி வந்ததும் கடுகு தாளித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: