முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 3

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் - 1 மூடி

வறுத்த வேர்க்கடலை - 1/2 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 10

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை துருவி, வேர்க்கடலையுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

முருங்கைக்காயை நறுக்கி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்.

காய் வெந்தவுடன், அரைத்த தேங்காய் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

5 நிமிடம் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.

தேங்காய் எண்ணெயை காய வைத்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இறக்கி வைத்துள்ள குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: