முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் - ஒரு மூடி
வறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
தேங்காய் எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்த்து முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வேக வைக்கவும்.
மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த முருங்கைக்காயுடன் ஊற்றி கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை குழம்பில் சேர்த்து கலக்கவும்.
காரம் அதிகமில்லாத, தேங்காய் எண்ணெய் மணத்துடன் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.