முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய முருங்கைக்காய் - 3

பெரிய வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 3 பற்கள்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

திக்கான தேங்காய்ப் பால் - 1/2 கப்

கடுகு, உளுந்து, சோம்பு - தலா 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.