முருங்கைக்காய் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 5
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
புளி - 3 தேக்கரண்டி தண்ணீர்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க தேவையானவை:
தக்காளி - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
2 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும்.
பிறகு புளி தண்ணீர் சேர்த்து நன்கு வற்றும் வரை வதக்கவும். தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
அதில் அரைத்த (தக்காளி, சீரகம்) விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.