முருங்கக்காய் தேங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கக்காய் - 2

தேங்காய் - 1/2 மூடி

சின்ன வெங்காயம் - 6

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 8

மஞ்சள் தூள் - சிறிது

கடுகு - சிறிது

வெந்தயம் - சிறிது

புளி - சிறிது

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கக்காயை சிறிது சிறிதாக வெட்டி பின்னர்வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

புளியை தண்ணிரில் ஊற வைத்து கொள்ளவும்.

தேங்காய், மிளகு, சின்ன வெங்காயம்,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.

புளி தண்ணிரில் தேங்காய் அரைத்த விழுத் மற்றும் உப்பு முருங்கக்காய் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு தளித்து பின்னர் கலந்து வைத்த அனைத்தையும் ஊற்றி கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: