முந்திரிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 1/2 கப்
தக்காளி - 5
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை பழ அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
தேங்காய் - 1 தேக்கரண்டி
முந்திரி - 15
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, வெங்காயத்தை குறுக்காக இரண்டாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குகவும். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தேங்காய் துருவலுடன் முந்திரியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் 20 முழு முந்திரியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி குழம்பில் போடலாம்.