முட்டைகோஸ் பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 1 கிலோ

துவரம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்துமல்லி - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பட்டை - 2

கிராம்பு- 4

ஏலக்காய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் முட்டைகோஸை நறுக்கி கொள்ளவும்.

பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த வாசனை மசாலவை போடவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கிவிட்டு இஞ்சி பூண்டு விழுதை போடவும்.

நன்கு வதங்கியவுடன் தக்காளி மற்றும் முட்டைகோஸை பொட்டு வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் இறக்கி பறிமாறவும்.

குறிப்புகள்: