மிளகு குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பூண்டு - 5 பல்
கறிவேப்பில்லை - 4 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் + தனியா தூள் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை:
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிகவும் பொடிதாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
புளியினை 3 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியினை சேர்த்து நன்றாக கரைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து கொள்ளவும்.
பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெந்தாயம் போடவும். அதன் பின் உரித்த பூண்டினை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
கடைசியில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை சாதத்துடன் சுட்ட அப்பளம், உருளைக்கிழங்கு புட்டு உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்