மிளகுசீரக குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/4 கப்

முருங்கைக்கீரை - 1 கப் (உருவியது)

தக்காளி - 1

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 3

பூண்டு - 2 பல்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்துக் கொள்ளவும்:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

அரிசி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

மிளகு - 3

சீரகம் - சிறிது

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவை ஆறிய பின் தேங்காய் துருவல், சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதி வந்த பின் முருங்கை இலையை போட்டு வேகவிடவும்.

அவை வெந்த பின் வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், தக்காளி போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பின் அரைத்த விழுது, உப்பு போட்டு 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின் தாளிக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை நெய்யில் தாளித்து குழம்பில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: