மாம்பழ புளி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு பழத்த மாம்பழம் - 1

புளி - எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் - 1/2 கப்

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

தக்காளி - 4

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சரிசி - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்குங்கள்.

மாம்பழத்தை தோலுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.

புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து கரையுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து கிளறுங்கள்.

இது நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து மாம்பழத் துண்டுகளை சேருங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்தாற்போல ஆனதும் வறுத்து அரைத்தபொடியை தூவிக் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: