மாம்பழ கறி
தேவையான பொருட்கள்:
ரொம்ப பழுக்காத மாம்பழம் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
கடுகு, வெந்தயம் - தாளிக்க
வெங்காயம் - 1/2 (விரும்பினால்)
கொத்தமல்லி இலை - சிறிது
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக விடவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மாம்பழம் சாஃப்டானதும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பின் தயிரை அடித்து இதில் கலந்து விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாம்பழ கலவையில் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுத்து பரிமாறவும்.