மாங்கொட்டைக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்கொட்டைகள் - 4

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - பட்டாணி அளவு

புளி - சிறு எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாங்கொட்டைகளை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

வறுத்து எடுத்தவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து எடுத்து, இரண்டு ஆழாக்கு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்துள்ள மாங்கொட்டைகளை அடுப்பில் வைத்து வேகவிடவும். சிறிது வெந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து கொதிக்க விடவும்.

கடுகு, பெருங்காயம் தாளித்து குழம்பில் கொட்டவும். மாங்கொட்டைகள் நன்கு வெந்ததும் இறக்கி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: