மாங்காய் சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய மாங்காய் - 1

வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/4 கப்

தேங்காய்ப்பால் (இரண்டாம் பால்) - 1 கப்

கறிவேப்பிலை - 1 நெட்டு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

இரண்டாம் தேங்காய்ப்பாலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் (தேங்காய் முதற்பால் தவிர) வெட்டிய மாங்காயுடன் சேர்த்து அவியவிடவும்.

மாங்காய் நன்கு அவிந்ததும் அதனுள் முதற்பாலை விட்டு கொதிக்க விடவும்.

ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை இடியப்பம், சோறுடன் சாப்பிடலாம்.