மாங்காய் இஞ்சி குழம்பு
தேவையான பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 50 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 மூடி
கசகசா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியை தோல் சீவி கழுவிவிட்டு, பொடியாக நறுக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம், தேங்காய், கசகசா சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், அத்துடன் தனியா தூள், சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, பூண்டு, 2 சின்ன வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதக்கும் போது இறக்கி பரிமாறவும்.