மஷ்ரூம் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 10
வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1 துன்டு
பூண்டு - 4
சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிமசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்குகேற்ப
உப்பு - தேவைக்குகேற்ப
செய்முறை:
வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை அவற்றை அரைத்துக் கொள்ளவும்.
மஷ்ரூமை கட் பண்ணி நன்றாக அலசி கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மூன்றையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கின பின்பு, தக்காளி சேர்த்து கிரேவி போல் வரும் வரை வதக்கவும்.
பின் மஷ்ரூம் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், கறிமசாலாத் தூள், மிளகாய் தூள், உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இதனுடன் அரைத்த விழுது மற்றும் 1 கப் தண்ணீர் இரண்டையும் ஊற்றவும்.
அடுப்பை குறைத்து மூடி இட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.