மஷ்ரூம் குழம்பு
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 200 கிராம்
கறிவேப்பிலை - 200 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
உளுந்து - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 10
மிளகாய் வற்றல் - 10
தக்காளி - 1/2
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகு, பாதி வெந்தயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து மிக்சியில் போட்டு தேவைக்கு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்த புளி கரைசல், மஷ்ரூம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசம் போன பின் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.