மல்லி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - 1 பெரிய கைப்பிடி அளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

உருளை - 2 (விரும்பினால்)

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.

இதில் பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

தேங்காய் வாசம் வந்ததும், கொத்தமல்லி இலையை நறுக்கி சேர்க்கவும்.

கொத்தமல்லி லேசாக சுருண்டதும் சாம்பார் தூள் போட்டு பிரட்டி எடுக்கவும்.

ஆறியதும் தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.

மீண்டும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். உருளை சேர்க்க விரும்பினால் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். உப்பு போட்டு மூடி வேக விடவும்.

இதில் அரைத்த விழுது சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.

பின் தேவையான நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு பதத்தில் கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்துடன் அருமையாக இருக்கும்.