மலபார் காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 4 அல்லது 5 (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)

பூண்டு - 6 பல்

தக்காளி - 1

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - 2 தேக்கரண்டி (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)

உடைத்த கடலை - 2 தேக்கரண்டி (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)

கடுகு, வெந்தயம் - தாளிக்க

புளி கரைத்த தண்ணீர் - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் தேங்காய் மற்றும் உடைத்த கடலை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.

வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக நீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை ஊற்றவும்.

நன்கு கொதித்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

மிளகாய் தூள் வாசம் போனதும் அரைத்து வைத்த விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக அடிபிடிக்கும் அதனால் நன்கு கிளறவும்.

கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.

புலாவ், இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் வாசம் பிடித்தால், தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்யலாம் இல்லையெனில் உங்களுக்கு பிடித்த எண்ணெயிலேயே செய்யலாம்