மணத்தக்காளி வற்றல் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வற்றல் - ஒரு கைப்பிடியளவு

புளி - சின்ன எலுமிச்சையளவு

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகம் சோம்பு தூள் - 1/2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 1

தக்காளி - 2

நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - கைப்பிடியளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து மணத்தக்காளி வற்றலை போட்டு சிவந்தவுடன் உரித்த முழு வெங்காயம், பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.

மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு போட்டு வதக்கி புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

2 வது முறையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: