மசூர் பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மசூர் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1 பெரியது

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1 மேசைக்கரண்டி

மல்லி பொடி - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மசூர் பருப்பை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும், இது விரைவில் வெந்துவிடும், எனவே குக்கர் தேவையில்லை

வெங்காயம், தக்காளி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும், இஞ்சி,பூண்டு துருவிக்கொள்ளவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்

வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தக்காளி நன்கு மசியும் வரை நன்றாக வதக்கவும்,பின் மல்லிபொடி சேர்க்கவும்

இப்போது வேகவைத்த பருப்பை இதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவத்து இறக்கவும், இதனுடன் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: