ப்ளைன் வெங்காய குழம்பு
தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 15
தக்காளி - 2 (சிறிய அளவில்)
கறிவேப்பிலை - 2 இனுக்கு
சீரகம் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
எண்ணைய் - 1/4 கப்
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
வட்டமாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 1 இனுக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணைய் கொஞ்சம் ஊற்றி சிறிய வெங்காயம், போட்டு சிறிது வெந்தபின் தக்காளி போட்டு சீரகம்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின் சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் எண்ணைய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மீதியுள்ள எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை வாணலியில் ஊற்றவும். பின் இதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 8 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.