பொரித்த குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 3

துவரம் பருப்பு - 1/4 கப்

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 5 மேசைக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

துவரம்பருப்பை வேக வைக்கவும். முருங்கைக்காயை 2 அங்குல நீள அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

தேவையான தண்ணீரில் முருங்கைக்காய்களை போட்டு கொதிக்க விடவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெயில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை வறுக்கவும். அத்துடன் சீரகம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

அதில் வெந்த துவரம் பருப்பும் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

தேங்காய் எண்ணெயை இரும்புக் கரண்டியில் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் குழம்பில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.