பொரித்த குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை - 1 கப்

புளி - கோலி அளவு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பூண்டு - 7 பல்

தேங்காய் - 1 மேசைக்கரண்டி

ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலைப் பருப்பு, எண்ணெய் - சிறிது

ஆல் பர்பஸ் பொடிக்கு:

கடுகு - 25

கிராம் வெந்தயம் - 25

கிராம் சீரகம் - 50 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

வேர்க்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 50 கிராம்

வெள்ளை எள் - 50 கிராம்

மிளகு தூள் - 50 கிராம்

கறிவேப்பிலை - 4 கொத்து

(காய்ந்தது) தனியா - 50 கிராம்

பெருங்காயம் - 15 கிராம்

செய்முறை:

புளியைக் கரைத்து கொள்ளவும். தேங்காய், ஆல் பர்பஸ் பொடி, 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை, தக்காளி, புளி நீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

நன்கு வெந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.

எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய 3 பல் பூண்டு தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

ஆல் பர்பஸ் பொடி:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.

குறிப்புகள்: