பொரித்த குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

சிவப்பு மிளகாய் - 7 அல்லது 9

சின்ன வெங்காயம் - 11 அல்லது 12

பூண்டு - ஒரு பல்

தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

அவரைக்காய் - 6 அல்லது 7

நெய் - 2 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து, அதில் பாதியளவை (5 - 6) நீளமாக நறுக்கி வைக்கவும். அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

சிவப்பு மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்ப்பூ, ஒரு தேக்கரண்டி சீரகம் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பாசிப்பருப்புடன் நறுக்கிய அவரைக்காய் துண்டுகளைச் சேர்த்து, வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த பாசிப்பருப்பு அவரைக்காய் கலவையுடன், மிக்ஸியில் அரைத்த விழுதைச் சேர்த்து குழம்பு பதத்திற்கு கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும். 2 – 3 முறை பொங்கி வருமாறு கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அத்துடன் சீரகத்தையும் பொரித்து குழம்பில் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சம் பழச் சாற்றை குழம்பில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அவரைக்காய்க்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காயும் சேர்க்கலாம். இந்தக் காய்களை தனியாக வேக வைத்து குழம்பில் சேர்க்கவும்.

குழம்பை அதிகமாக கொதிக்கவிட வேண்டாம். ரொம்பவும் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் ருசி மாறிவிடும்.