பொரிச்ச குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
உப்பு - தேவையான அளவு
வேக வைக்க:
பாசிப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
குழம்பில் சேர்க்க காய்:
கத்தரிக்காய் அல்லது முருங்கைக்காய் அல்லது அவரைக்காய் (ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து) - 200 கிராம்
அரைத்துக் கொள்ள:
சிவப்பு மிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - 1 1/2 மேசைக்கரண்டி
பூண்டு பல் - 3
சின்ன வெங்காயம் - 9
குழம்பில் கடைசியில் சேர்க்க:
எலுமிச்சம்பழம் 1 - சாறு எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பருப்புடன் நறுக்கிய காய்களை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்பு, காய்களுடன் அரைத்தவற்றை சேர்த்து, குழம்பு பதத்துக்குக் கரைத்து, அடுப்பில் வைக்கவும்.
3 முறை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ரொம்ப நேரம் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் விடும்.(ருசி மாறி விடும்)
பின் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தாளித்துக் குழம்பில் சேர்க்கவும்.
இன்னும் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு, வெடித்ததும் அதையும் குழம்பில் சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறவும்.