பேச்சுலர்ஸ் கத்திரிக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 1

பூண்டு - 2 பற்கள்

டின் தேங்காய்ப்பால் - 1 கப்

மெட்ராஸ் கறி பவுடர் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

புளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை வேண்டிய துண்டுகள் போடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

பூண்டை நசுக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை காயவைத்து கிள்ளிய காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் சிவக்க விட வேண்டாம்.

பிறகு கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். காய் பாதிவேக்காடானதும் கறிபவுடர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

பின்பு அதில் தேக்காப்பால், புளி மற்றும் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.

காரத்தை சரிபார்த்து மேலும் தேவையென்றால் மிளகுத்தூள் சிறிது தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: