பேகன் பர்த்தா
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
வெங்காய விதை அல்லது கலோஞ்சி, சீரகம் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா பொடிக்கு:
தனியா - 1/4 கப்
ஏலக்காய் - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 4
ஒரு இன்ச் அளவில் பட்டை - 4
ஜாதிக்காய் - பாதி (அல்லது) 1 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி -
பிரியாணி இலை - 2
சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி - 1
பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு -
ஒரு தேக்கரண்டி சுக்கு - சிறிது (அல்லது) 1 தேக்கரண்டி சுக்குப்பொடி
செய்முறை:
கத்தரிக்காயைப் பாதியாக நறுக்கி அவனில் ப்ரோயில் செய்து குழையாமல் எடுத்து வைக்கவும். (தணலில் சுட்டும் எடுக்கலாம்). வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித் தழையை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காய விதை / கலோஞ்சி, சீரகம், புதினா தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தணலில் வாட்டிய கத்தரிக்காயை மசித்து விட்டு சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு மசாலாவுடன் கலந்து வந்ததும், கரம் மசாலா தூவி கிளறி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
கரம் மசாலா பொடி:
கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.
ஒவ்வொன்றாக பொருளாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக சூடு போக ஆற வைக்கவும்.
ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.
குறிப்புகள்:
நீர்க்க வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
கரம் மசாலா செய்முறைக்கான லின்க் :