பெல்பெப்பர் குழம்பு
தேவையான பொருட்கள்:
பெல் பெப்பர் - 1
வெட்டிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
வெட்டிய உள்ளி - 1 தேக்கரண்டி
கறித்தூள் - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
புளிக்கரைசல் - 1/4 கப்
கொத்தமல்லி இலை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெல்பெப்பரை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெட்டிய பெல்பெப்பர், வெங்காயம், உள்ளி போட்டு நன்கு வதக்கவும். (பொரியல் மாதிரி)
பின்னர் அதனுள் பெரிய சீரகம், கடுகு, வெந்தயம், சேர்த்து வதக்கவும்.
கலவை நன்கு வதங்கியதும் அதனுள் புளிக்கரைசல், 1/4கப் தண்ணீர், கறித்தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி அவிய விடவும்.
கலவை ஓரளவு தடித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை சோறு, பாண், புட்டு, இடியப்பம் என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக உண்ணலாம்.