பூண்டு மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வடகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
புளி - எலுமிச்சை அளவு
குழம்புத் தூள் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித் தழை - சிறிது
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
குழம்புத் தூள்க்கு:
மஞ்சள் - நாலு துண்டு
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ (வெயில் உலர்த்தவும்)
தனியா (மல்லி) - 1/4 கிலோ
கடுகு - 40 கிராம்
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 20 கிராம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சோம்பு (பெருஞ்சீரகம்) - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து, அதில் குழம்புத் தூளை கலந்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வடகம் பொரிந்ததும் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புளி கரைசலை சேர்க்கவும்.
ஓரளவு நுரைத்து குழம்பு சுண்டியதும், நெய் ஊற்றி இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.
குழம்புத் தூள்:
அனைத்தையும் பக்குவமாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கு குழம்புப் பொடி ரெடி.