பூண்டு குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூண்டு - 40 பல் (அல்லது) தலைக்கு 15

புளி - எழுமிச்சை பழ அளவு

சௌராஸ்டிரா குழம்பு பொடி - 2 மேசைக்கரண்டி

கடுகு, உளுததம் பருப்பு - தாளிக்க

நல்லெண்ணெய் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

சௌராஸ்டிரா குழம்பு பொடிக்கு:

மல்லிவிதை - 1 கிலோ

மிளகாய் வற்றல் - 200 கிராம்

விரலி மஞ்சள் - 100 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

கருப்பு உளுத்தம் பருப்பு - 600 கிராம்

துவரம்பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

செய்முறை:

முதலில் பூண்டை தோலுரித்து கொள்ளவும், புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றி காய வைக்க வேண்டும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுததம் பருப்பு, பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

பூண்டு பொன்னிறமான பிறகு சௌரஸ்டிராக்குழம்பு பொடியை போட்டு கிளறி விடவும்.

பின்பு உப்பு மற்றும் புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நல்லெண்ணெய் வெளியே வரும்வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.

சௌராஸ்டிரா குழம்பு பொடி:

முதலில் அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.

பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வறுக்க வேண்டும்.

பிறகு அனைத்தையும் ஆற வைத்து மெஷினில் கொடுத்து அரைக்கவும். (அல்லது மிக்ஸியில் நைசாக அரைக்கவும்).

குறிப்புகள்: