பூண்டு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு பூண்டு - 4

பழைய புளி, புது புளி இரண்டும் சேர்த்து - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

தூள் வெல்லம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கல் உப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

பூண்டினை தோலுரித்து வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு போட்டு வெடிக்கவிடவும்.

அதன் பின்னர் அதில் தோலுரித்த பூண்டு பற்களைப் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.

பூண்டு வதங்கியதும் மிளகுடன் சேர்த்து எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

ஊறிய புளியை கரைத்து இரண்டு கப் அளவிற்கு கரைசல் எடுத்துக்கொள்ளவும்.

அரைத்த பூண்டு மிளகு விழுது உள்ள பாத்திரத்தில், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அதில் புளிகரைசலை ஊற்றி, கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் புளி கரைசலை ஊற்றி, வாணலியை மூடி வைத்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து கெட்டியாக ஆனதும் வெல்லத் தூளை போட்டு கிளறி விட்டு இறக்கி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: