பூசணிக்காய் மோர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

மோர் - 1 கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 4

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூசணிக்காயை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய், சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மோருடன் அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

அதனுடன் கரைத்த மோரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: