புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
புளி - 1 கப் (கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர்)
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 10
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 20
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
மாங்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும்.
பின் கடாயில் நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு, பெருங்காயம், வரமிளகாய், வெந்தயம், வெங்காயம், பூண்டு(முழு) என ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பின் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் சிறிதளவு சேர்த்து மிதமான தீயில் நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பரிமாறவும்.