புளி காய்ச்சல்
0
தேவையான பொருட்கள்:
புளி - 3 எலுமிச்சம் பழம் அளவு
சிவப்பு வத்தல் - 5
வெந்தய பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
நல்ல எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இனுக்கு
செய்முறை:
புளியை நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்கவிடவும்.
வெடித்தபின் கறிவேப்பிலை போட்ட உடன் வெந்தயபொடி, பெருங்காயம் போட்டு பின் புளிதண்ணீரை ஊற்றி, தண்ணீரையும் ஊற்றி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கொதி வந்தவுடன் நல்ல எண்ணெய் ஊற்றி குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.